உலகையே சுற்றி வந்த மதமதப்பில் பறந்து வந்தது பறவை ஒன்று...
உதயத்தை கண்டதும் உதயமானது பசுமையின் நினைவலைகள்!!
நினைவுகள் கிளர்ந்ததும் உருவெடுத்தது சிறு கோழி குஞ்சாய்...
குழந்தையின் கைகளில் குழந்தையாகிட குழந்தையாய் அடம்பிடித்தது...,
எதிர்பார்ப்பாய் எதிர்பார்த்தது எதிர்பார்ப்பில்லா கோழிக்குஞ்சு!!
தாய் கோழியின் பதைபதைப்பில் வாய் திறந்தேன் நான்...
“பொக்கிசமாய் போற்றிடுவேன் வா என் அருமை கோழிகுஞ்சே”
பூவாய் சிரித்தது எனதருமை கோழி குஞ்சு...........

கொடுத்துவைத்த கோழிக்குஞ்சு
ReplyDeleteஅடைக்கலத்தை தந்த தாய்க்கு
மடைதிறக்கும் வெள்ளமென
பெருக்கெடுக்கும் நன்றிக்கடன்
கொடுக்குமொரு கோடியென
அறிந்திடுவாய் கோழிநீயும்.
வானிருக்கும் காலம்வரை
வந்துநிற்கும் உறவுஇது
தோழி இது கவிதையில்லை
எழுதியதும் மையில் இல்லை.
இதயமதில் கொப்பளிக்கும்
குருதியினால் எழுதியது
கோடிஜன்மம் தொடருமொரு
பந்தமிது அறிந்துவிடு.
-அன்புடன் அப்பாவி கோழிக்குஞ்சு.