Thursday, November 25, 2010

என் தேவதை.........

கருவில் கூட நான் எட்டி உதைத்தேனாம்,
அப்படியும் என்னை அடைகாத்தாய்
பிஞ்சு விரல்களால் உன் கன்னம் கிழித்தேனாம்
உன் உதடுகளால் எனக்கு ஒத்தடமிட்டாய்
இப்போ நீ ஒரு தேவதையாம்
தேவதைகளுக்கு சிறகுகளும் உளதே
உன் பாச சிறகில் பதுங்கிட இடம் தா...... 

காதலோடு தோழமை செய்வோம்!!!!!!!!!!!!!!!!!!!!!!

நட்பின் முதல் பக்கம் நீ என்றாய்!!!!
ஏன் நண்பா இன்று அந்த பக்கம் இல்லை????
படித்து படித்து செல்லரித்து விட்டதா????
இல்லை அலுத்து விட்டது என கிழித்து விட்டாயா????
செயற்கையாய் கூட இயற்கையாய் இருக்க முடியவில்லை உன்னிடம்!!!!
உன்னிடம் வேண்டுவது காதல் பிச்சை அல்ல என் தோழமை பிச்சை!!!!!
இறைஞ்சுவதை விட இறப்பது மேல் என்பேன், ஆனால்!!!!!!!
உன்னிடமோ இரஞ்சுவதை தவிர வேறெதுவும் அறியேன்......
வா நண்பா, காதலோடு தோழமை செய்வோம்.....
பொட்டிவிட்ட என் இதயம் நின்று விடாமல் இருக்க!!!!!!
உன்னால் கொல்லப்பட பட்ட உணர்வு உயிர்த்தெழாமல் இருக்க!!!!!